Friday, August 26, 2011

15. ஆத்ம பிரார்த்தனையின் நுணுக்கங்கள்


15. ஆத்ம பிரார்த்தனையின் நுணுக்கங்கள்

      இயற்கையைப் பற்றி நுணுக்கமான கருத்துக்கள் தொடக்கத்தில் புரியாததுபோல் இருந்தாலும் ஆத்மப் பிரார்த்தனையை பழகப் பழக தனக்குத்தானே தெளிந்து நிற்கும்.
      இயல்புணர்வை நினைவுபடுத்தி உள்ளானந்தமாக வாழும் வாழ்க்கையே சிறந்தது. ஆனால் இயற்கையின் ஆற்றலை பற்றி புத்தகங்களைப் படித்து நேரத்தை வீணாக்குகின்றோம். இவற்றைப் பற்றி பேசிச்கொண்டு வாழ்நாளை வீணாக்குகின்றோம். அதைப் பற்றி நேர்வழி அறியாமல் சுற்று வழியில் சுழன்று கொண்டே இருக்கின்றோம். ஒவ்வோர் இயல்புணர்வும் தெய்வீகமானது. ஆனால் அது அறியாமை என்ற மேகங்களால் மூடப்பட்டுள்ளது. அதனால்தான் மனிதர்களுக்குள் இத்தனை வேறுபாடு.
      இயல்புணர்வை ஆற்றலை அறியும் முறைகளில் ஒன்று ஆத்ம பிரார்த்தனை ஆகும். இது அவர் வினைக்கு ஏற்பக் கருத்துக்களை மேன்மேலும் விளக்கிக் காட்டுவதாகும். இது மனத்தைத் தட்டி அதிலிருந்து அவனுக்கு வேண்டிய நுண்ணறிவை அறிந்து கொண்டு அவர்களை ஒழுக்கச் சாதகத்திற்கு கொண்டு வரும்.
        ஆத்ம பிரார்த்தனை என்பது இயற்கை ஆற்றலைத் தினமும் நினைவுபடுத்தும் பிரார்த்தனைப் பயிற்சியாகும். இந்த இயற்கை இயல்புணர்வால் புறப் பொருள்களின் மீது உள்ள எண்ணம் மெய்ப்பொருளைப் பற்றுவதால் புலன் வழிச் செயல்கள் ஒழுங்கு படுகின்றன. இக யுத்திகள் அழிகின்றன. ஆத்ம பிரார்த்தனையை இயல்புணர்வின் மூலம் பயிலும்  போது அது அநேக இரகசியங்களை (நுணுக்கங்கள்) ஆராய்ந்து தெளிவடையச் செய்கிறது.
           1. கர்மா என்ற அதி அற்புத வினையில் வெற்றி காண்பது சிரமமாகும். தூய்மையாகச் செயல்பட்டு அதனை அனுபவிக்க வேண்டும். இதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். “நான் யார்?” இந்த தெளிவு கடைசி மூச்சு உள்ளவரை இருக்க வேண்டும்.  பூரணத் தெளிவோடு இருக்கும்போது பேருண்மை உனக்குத் தெளிவாக விளங்கும்.
         2. இயற்கை சக்தியை நமது உடலில் உள்ள முக்கியமான நாடிகளுக்கு இட்டுச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும்  இயல்புணர்வை விழிப்படையச் செய்கின்றது. இவை சூக்குமச் சரீரத்தை (நுண் உடலை) அறியச் செய்து முதிர்ந்த நிலையில் அதிசூக்கும வெளிக்குச் செல்லும் ஆற்றல் பெற்றுச் சென்று வருவது இயல்பாகிவிடும். இறுதி மரணவேளை நெருங்கும்போது இந்த ஜீவன் அதிசூக்கும வெளிக்குச் சென்று பிரம்மமந்திரம் வழியே வெளியே செல்லும். இதுவே உயர்ந்த நிலை; பிறப்பின் பெரும் பயனாகும்.
        3. ஆத்ம பிரார்த்தனை உடலில் உள்ள முக்கிய இயல்புணர்வு மையங்களை (சக்கரங்களை) அதன் இயற்கை நுண் அதிர்வுகளை பலப்படுத்தி, தூய்மையுறச் செய்கிறது. இதனால் மனமும் உடலும் சமவிழிப்பு அடைந்து நுண்ணுர்வு விழிப்பு நிலையில், பெரு விழிப்பால் மேலோங்கி உயிர் ஆற்றலை (குண்டலினி) விழிக்கச் செய்கின்றது.
        4. இயற்கை அச்சின் பேரியக்க ஒருங்கிணைப்பு ஆற்றல் ஹ்ரித் சக்கரத்தில் நுண்ணுணர்வு தன்மாற்றம் ஏற்படுத்திப் பெரு விழிப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் தன்மாற்றம் மின்காந்தப் பெருநிலையில் சூக்கும சரீரத்தில் உள்ள (நுண் உடலை) இயல்புணர்வை விழிப்படையச் செய்கின்றது. இந்த ஆற்றல் அனாகதச் சக்கரத்தை ஊக்குவித்து, உந்துவதால் உயிர்ச்சக்தி (குண்டலினி சக்தி) மேல் நோக்கிச் செல்லும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இந்தச் சக்தி கபால வெட்ட வெளியை அடைந்ததும் அக அதீதம் சூக்கும சக்தியாகத் தன்மாற்றம் அடைகிறது.
           5. மனமே நமது உச்சிக்குழிக்கு கீழே உள்நாவுக்கு மேலே உள்ள இடத்தில் நினைவை நிறுத்தி நுண் அதிர்வால் இயற்கை மெய்ப் பொருளை ஆராதனை செய்வதால் மெய்யுணர்வோடு இயல்புணர்வு ஈர்க்கப்பட்டு முச்சுடர் விரிந்து ஒலியே ஒளியாகின்றது. ஆத்மா, அக, புற அதீதத்தின் சூக்கும ஜீவ பயணத்தை உற்று உணர்வதால் மேன்மையானது.
          6. பிரபஞ்ச வெளியில் பரந்து நீண்ட மகா குண்டலினி சக்தி, சிவ பிரபஞ்ச வெளியில் மெய்ஞ்ஞானப் பேரூணர்வில், புற அதீதம் சூக்கும சக்தியாகத் தன்மாற்றம் அடைகிறது. இதுவே எல்லா மூலங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது.
           7. நம் ஜீவனை ஆத்மாவாகக் கொண்டு வந்து பேரானந்தப் பெரு வெளியில் அக அதீதம் சூக்கும சக்தியும் புற அதீதம் சூக்கும சக்தியும் எங்கும் நிறைந்துள்ள சிவவெளியில் ஐக்கியமடையச் செய்வதுதான் அதீதம். அந்த அதீதப் பேரொளி உனக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். அங்கிருந்து பிரம்ம மந்திரத்தில் கபாலத்தை அடைந்து உள்ளானந்தப் பேரொளியை இதயக் கமலத்தில் வீற்றிருக்கும், இந்த அதீதம் உள்ளானந்தப் பேரொளியைக் கண்டு, அதனைப் பெற்ற பெரும் பேறாகக் கண்டு இருத்தல் வேண்டும்.
          8. அறிவை இயல்புணர்வில் நிலைநிறுத்திக் கடமைகளைச் சிறப்பாக செயலாற்றி, மாறுபட்டஉலகச் சூழலில் நிலையான மனோநிலையோடிருங்கள். முடிந்த அளவு சேவையில் ஈடுபடுங்கள். உங்கள் மனம் பிரபஞ்ச உணர்வோடு நிலைத் திருக்கட்டும். உங்கள் புத்தி சரியாக பகுத்தறியட்டும். உங்கள் ஆத்மா இயல்புணர்வின் தொகுப்பால் மெய்ப்பொருளுடன் இணைந்திருக்கட்டும்.
ஆத்ம பிரார்த்தனையால் இயல்புணர்வை நினைவுபடுத்தும் பயிற்சி அல்லது பிரார்த்தனை அன்றி வேறில்லை. ஆத்ம பிரார்த்தனையின் உண்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகப் புரிந்துகொண்டு அது சுட்டிக்காட்டும் உண்மைப் பொருளைத் தன் இயல்பு நிலையாக உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.
ஆத்ம பிரார்த்தனையில் இயல்புணர்வின் சக்தி தொகுப்பு சித்தி சுத்தி ஏற்படும். இதனால் எதிர்ப்பு சக்தி தேகத்தில் பரவும். அருள்சக்தி வளரும். சிற்றறிவு பேரறிவாக மாறும். எண்ணிலடங்கா பயன்கள் இயல்புணர்வின் சக்தி தொகுப்பில் கிடைப்பதால் வரும் இந்த உண்மைகளை அவரவர்கள் பிரார்த்தனை செய்து உணர்ந்து கொள்ளலாம்.
வெளியில் அறிய முடியாமல் இருந்த உங்களது ஆத்மா ஆத்மபிரார்த்தனையில் உங்களிலேயே வைத்து முழுமையானவ ராக இருங்கள்.


No comments:

Post a Comment