Friday, August 26, 2011

13. இயல்பு-அருள் பயிற்சி



13. இயல்பு-அருள் பயிற்சி

       இன்று நமது ஒழுக்க நெறியிலும், மதங்களிலும் இருக்கும் சீர்குலைவிற்கு முக்கியமாக நமது சூழ்நிலையும், நமது தவறான பயிற்சியுமே காரணம். மன ஆரோக்கியத்துக்கு செய்யும் பயிற்சிகள் மிக குறைந்து விட்டன. ஒரு மனிதன் நல்ல ஊதியம் பெற்று சுகமாக வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான உலக பந்தமான பயிற்சியை கற்க முக்கியத்துவம் கொடுக்கின்றோம். தன்னை உணர்வதற்குத் தேவையான பயிற்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்று வழிபாடு செய்வதற்கு மட்டுமே மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் உட்பொருளை அறியாமல் தங்கள் ஆயுள் முழுவதும் அநேகமாக ஒரு பயனுமின்றி இத்தகைய வழிபாடுகளைச் செய்து வருகின்றோம். இதனால் தன்னியல்பை அறியாமல் ஆசைகள், கவர்ச்சித் தூண்டுதல்கள், உணர்ச்சிவசப்பட்ட கோபதாபங்கள் ஆகியவை முன்போலவே இருக்கின்றன. இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம் தன்னியல்பை அறிவதேயாகும். இயல்பு பயிற்சியில் மனிதனை சரியாகப் பக்குவமாக்கும் இயற்கைச் சக்தி இருக்கிறது. சரியாக பக்குவமாக்குவது என்னவென்றால் தன்னியல்பை அறிந்து அதன் விளைவாக அவனுடைய இயந்திரங்கள், புலன்கள், செயல்திறன்கள் இவை மிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற. இதை தகுதி பெற்ற ஆசிரியர்களின் வழித்துணையுடன் சரியான முறையில் பயிற்சி செய்வது மிக முக்கிமான அம்சம். இந்த வகைப் பயிற்சியில் உள்ளத்தில் சாந்தமும், மன அமைதியும், எளிமையும், மென்மையும் ஏற்படும்.
       மேற்கூறிய பயன்களைக் கொடுக்கவில்லை எனில் அந்தப் பயிற்சிகள் சரியான பயிற்சி அல்ல, சில ஆசிரியர்கள் பயிற்சி கொடுக்கும் போது தங்களுடைய மனசங்கல்ப சக்தினால் மற்றவர் மனதில் சாதாரணமான செயல்பாட்டையும் நிறுத்தி அதன் விளைவாக தற்காலிகமாக உணர்ச்சியற்ற நிலையை உருவாக்குகிறார்கள். ஆரம்ப நிலையில் இருப்பவருக்கு இந்த மனோ நிலை மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இந்தப் பயிற்சிகள் சுய விளம்பரமும் தற்பெருமை நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டுதான் தாம் அடைந்துள்ள சக்தியை தவறான முறையில் பயன்படுத்துகின்றனர். இம்மாதிரி அடக்கி வைக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட எண்ணங்கள் மிக விரைவில் அதிக பலத்துடன் எதிர் தாக்குதல் தாக்கி அவருடைய உடல், மனத்தை தாக்குகின்றன. இதனால் மனக் குழப்பம், தலைவலி, எரிச்சல், கோபம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
       இயல்பு-அருள் பயிற்சியில் மனித இலக்கை அடைய வேண்டும் என்ற திடசித்தம், சரியான வழிமுறை, சரியான வழிக்காட்டி கொண்டுள்ளன. இவைகள்தான் பூரண வெற்றியடைவதற்கு தேவையான அம்சங்கள். இயல்பு-அருள் பயிற்சியானது அகத் தூய்மைப்படுத்துவதிலிருந்தும், யோக சக்கரங்களை சுத்தம் செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது உள்சுத்திகரிப்புடன் ஆரம்பமாகிறது. இதில் இயல்பான ஆற்றல் பரிவர்த்தனை முறையில் பயிற்சி அளிப்பதால் நமது இயல்பு சக்தியை அறிந்து கொள்ள செய்து, அதற்கு மேல் செல்ல நாமாகிய ``நான்’’ எனும் தன்னை அறிய செய்கின்றார். இந்தப் பயிற்சிகள் நான்கு நிலைகளாக உள்ளது.
      முதல் நிலைப் பயிற்சி : இதன் பயிற்சி காலம் மூன்று மாதங்களாகும். இதில் அன்றாட கடமைகளுடன் காலை, மாலை ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சியும், ஆத்ம பிரார்த்தனையும் செய்து இயல்பான சேவையில் விளக்கம் பெற வேண்டும். இதில் மூலாதாரச் சக்கரத்தில் ஆசிரியர் யோக சக்தியை செலுத்தி அதன் மூலம் அவருடைய உள்சிக்கல்களை நீக்கி யோக சக்கரங்களை சுத்தப்படுத்தி அவற்றைப் பலப்படுத்துவார்.
     இரண்டாம் நிலைப் பயிற்சி : இதன் பயிற்சி காலம் மூன்னூறு நாட்கள் ஆகும். இதில் அன்றாட செயல்களுடன் தினமும் காலை, மாலை ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சி, ஆத்ம பிரார்த்தனை செய்து தனக்குள்ளே விளக்கம் பெற வேண்டும். இயல்பான சேவையில் உள்முக ஆற்றலை வளர செய்ய வேண்டும். ஹரித் சக்கரம் குருவின் அருளால் இயக்கப்பட்டு சக்தி அனாகத சக்கரத்தை அடைகிறது. இது தூண்டப்பட்டும், ஊந்தப்படும் சக்தி சிறிது காலம் இதயத்தில் இருந்து பிறகு மற்ற சக்கரத்துக்கு பரவுகிறது. இதனால் ஆன்மீக முன்னேற்றத்தை எளிதாகவும், செம்மையானதாகவும் ஆக்குவதே இதன் சிறப்பு அம்சம்.
     மூன்றாம் நிலைப் பயிற்சி : இதன் பயிற்சி காலம் மூன்று வருடங்களாகும். தினமும் காலை, மாலையில் ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சியும், இயல்பு நிலை தியானம் செய்தல் வேண்டும். இயல்பான சேவையில் கர்மத்தை அகற்றி தன்னை அறிய செய்வதாகும். இதில் ஆச்ஞா சக்கரத்தில் இயல்பு அருள் தீட்சை அளிக்கப்படுகிறது. இதனால் மெய்யுணர்வதற்கான தாகம் நம்முள் வளர்ந்து வலிமை பெறத் தொடங்குகிறது. தன்னியல்புடன் ஆழமாக வேரூன்றுயதுமான பயனை உருவாக்குகின்றது.
    நான்காம் நிலைப் பயிற்சி : இது ஆசிரியர் பயிற்சியில் பல நுணுக்கங்களும் இரகசியங்களும் கற்றுத் தருபவை இதைப் புத்தகத்தின் வழியாகத் கற்க வியலாது.
                இந்தப் பயிற்சியின் மூலம் இயற்கையின் இயல்புடன் நிரந்தரமானது, ஆழமாக வேரூன்றியதுமான பயனை உருவாக்கி, நம் இயல்பு மெய்யுணர்வாக திரும்பியுவுடன் எல்லாச் செயல்களும், வேலைகளும் மகோன்னதமான பரம சக்தியுடன் நமக்கு தொடர்பு இருப்பதை நாம் இயற்கையாகவே உணர ஆரம்பிக்கிறோம். இந்த இயல்பு அருள் சக்தி காட்டாற்று வெள்ளமாய் பொங்கிப் பெருகி சுற்றியுள்ள அனைத்தையும் உயர்வானதாக, நல்லதாக குணப்படுத்தும் சக்தியுடையதாக மாற்றுகின்றது.

No comments:

Post a Comment