Friday, August 26, 2011

10. இயற்கை சூக்கும சக்தி


10. இயற்கை சூக்கும சக்தி

    இயற்கை சூக்கும சக்தியின் அருட்சக்தி வெட்ட வெளியில் இருந்து வந்ததேயாகும். அக, புற அதீதம் சூக்கும சக்தியின் அருட்சக்தி இயற்கை வெட்ட வெளிகளிலிருந்து வந்ததேயாகும். எல்லா மூலங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஒன்றுக்குள்ளே இதுவும் உள்ளது. இது நம்மைச் சீராக வழிநடத்திடச் செய்து நமக்கு உள்ளேயும் வெளியேயும் மறைந்திருக்கும் தூய இயல்புணர்வை அறியச் செய்கின்றது. இது மனித நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு வருகின்றது. இயல்புணர்வு சக்திக்கு இதன் பணிகள் மிகவும் இன்றியமையாதது.
      அக அதீதம் சூக்கும சக்தி என்பது குண்டலினியின் சூக்கும சக்தியாகும். புற அதீதம் சூக்கும சக்தி என்பது மகா குண்டலினியின் மெய்சூக்கும சக்தியாகும். இதன் பணி எல்லா ஜீவராசிகளுக்கும் இன்றியமையாதது. இதன் விழிப்பாற்றல் எல்லையற்றது. இதன் சக்தி எல்லா ஜீவன்களிடமும் உள்ளது. அதனதன் தேக அமைப்புக்கேற்ற வாறு அது இருக்கும். இந்தச் சக்திகள் விழித்து வினையாற்றுதலும் உண்டு. சில தாவரங்கள் கூட இயற்கைச் சக்தியின் உயிர் விழிப்பு நிலை பெற்று மெய்ஞ்ஞான நிலையில் இறையானந்தத்தைச் சுவைத்துக் கொண்டிருக்கும். ஒரு புல் கூட இந்த நிலையில் இருக்கும்போது அந்தப் பக்கம் வரும் விலங்குகள் கூட அந்தப் புல்லைக் கண்டு ஒதுங்கி நடக்கும். இதே நிகழ்வுகள் எல்லா ஜீவன்களுக்கும் அதன் வினைக்கு ஏற்ப நடக்கும்.
      அக அதீதம் சூக்கும சக்தி, கபாலத்தில் கலந்ததும் அந்த மனிதன், மனிதன் என்ற நிலையில் இருந்து உயர்கின்றான். அதாவது எல்லா உயிர்களிடமும் அன்போடு வாழ்தல், பிறருக்கு உதவுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றான். உலகில் அமைதி தோன்றும். மரண பயம் நீங்கும்.

       மாபெரும் இயற்கை சக்தியாகப் பராசக்தியானது விரிந்து பரந்து நீண்ட, முடிவு காண முடியாத பிரபஞ்ச வெளியில் உள்ள மகா குண்டலினி சக்தி சிவ பிரபஞ்ச வெட்ட வெளியில் மெய்ஞ்ஞானப் பேரூணர்வில் புற அதீதம் சூக்கும சக்தியாகத் தன்மாற்றம் அடைகின்றது. இது எல்லா மூலங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஒன்றுக்குள்ளே சூக்குமமாக இது உள்ளது. இந்தப் புற அதீதம் சூக்கும சக்தியின் ஒரு சிறு கூறாக இந்த ஜீவனாகத் திகழ்கின்றது. இந்த பிரபஞ்ச வெளியின் பேராற்றலை, வினையை ஜீவனில் ஆற்றி பிரபஞ்ச வெளிக்கு அழைத்துச் செல்ல இந்தக் குண்டலினியின் வினை ஜீவனுக்குத் தேவைப்படுகிறது. புற அதீதம் சூக்கும சக்தியின் ஆற்றலை அறியாமல் காலங்காலமாக நாம் வாழ்ந்து கொண்டு நமக்குள் ஒரு சிறு வட்டத்திற்குள் சுழன்று சுழன்று கொண்டு இருக்கின்றோம். அதற்கு அப்பால் இன்னொன்று இல்லை என்று அதற்கு அப்பால் உள்ளதை அறியாததனால் இந்த ஜீவன்கள் தமக்குள்ளே ஒரு வகையான தத்துவத்தை உருவாக்கி அந்தத் தத்துவத்துக்குள்ளேயே சுழலுகின்றன.

     அக, புற அதீதம் சூக்கும சக்தியில் செல்லும். அதன் சூக்குமப் பயணத்தை உற்று உற்று உணர்ந்தால் இருள் அகன்று ஒளி தரும். முக்தி நெறிக்கு வெளிச்சம் கொடுப்பது இது ஒன்றே. அதை உனக்குள் காண முடியாவிட்டால் நீ வேறெங்கும் தேடுவது வீண். இது பஞ்ச அவையங்களிலிருந்து மேம்பட்டதாய் உள்ள துரியாதீதத் திற்கு நின்று மெய்ஞ்ஞானப் பெருவிழிப்பில் அக, புற, சூக்கும சக்திகள் ஒன்றும் இடத்தை நோக்கும். பரிசுத்த ஜீவனால் மூன்று வாசல்களும் ஒவ்வொன்றாகத் திறக்க வைத்து மெய்ப் பொருளைக் கொண்டு வந்து அங்கேயுள்ள அதீதம் பேரொளியைக் கண்டு உள்ளானந்தம் அடைதல் வேண்டும்.

     இம்முறையில் ஆக்கப்பூர்வமான இயற்கை சூக்கும சக்தியை விழிப்படையச் செய்து விரிவடைந்து பெருகிப் பரவச் செய்கின்றது. இந்த உயிர்த் துடிப்பான அக அதீதம் சூக்கும சக்தியும், புற அதீதம் சூக்கும சக்தியை ஒன்றிப் பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. அக, புற அதீதம் சூக்கும சக்திக்கு, அதன் வெளிப் பாட்டிற்கு, விழிப்புச் சக்தி சத்தியமாகும். அக, புற அதீதம் விழிப்புக்கு அதைக் கொண்டு வர வேண்டும். அதன் அலை சக்தியை எண்ணத்த்திற்குள் கொண்டுவர வேண்டும். அந்தச் சிந்தனையில் அது நிரம்ப வேண்டும். சேவையின் தொடக்கம், அளவற்ற வளர்ச்சியின் ஆன்மீக அனுபவம், அன்பின் முதிர்ச்சி என்ற இவை நம்மை அக, புற அதீதம் சூக்கும சக்தியின் மெய் அனுபவம் அடைந்து எளிதில் இயல்புணர்வை விழிப்படையச் செய்து நமது வாழ்க்கையை முழுமையுறச் செய்கிறது.

No comments:

Post a Comment